ஆயுள் காப்பீடு: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை..!
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com
ஆயுள்
காப்பீடு & மருத்துவக் காப்பீடு எடுக்கும் போது எதைச் செய்ய
வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் நம்மில் பலருக்கு குழப்பம்
இருக்கிறது.
ஆயுள் காப்பீடு...!
ஆயுள் காப்பீட்டை எதற்காக எடுக்க வேண்டும் என்பதை அறியாமல், பலரும்
பெற்றோரின் கட்டாயத்தின் பேரிலோ, சில காப்பீட்டு முகவர்களின் நிர்ப்பந்தம்
காரணமாகவோ பாலிசி எடுக் கின்றனர்.
இன்னும் சிலர் இதை முதலீடாக நினைத்து
எடுக்கிறார்கள். ஒரு சிலர், குழந்தைகளின் பேரில் உள்ள அன்பின் காரணமாக உயர்
கல்விக்குத் தேவைப்படும் என நினைத்து பாலிசி எடுக்கின்றனர்.
இவை
அனைத்துமே தவறான வழிமுறைகள் ஆகும். காரணம், பாலிசி முதிர்வின்போது சுமார்
5% வளர்ச்சி அடைகிறது. ஆனால், கல்விக்கான பணவீக்க விகிதம் 10
சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. அதனால், இந்த பாலிசி மூலம் கிடைக்கும்
தொகை, கல்விக் கட்டணத்தை முழுமையாக ஈடுசெய்ய உதவுமா என்பது கேள்விக்
குறியாக உள்ளது. பொதுவாக, குழந்தைகளுக்கு ரிஸ்க் அதிகம் இருக்க
வாய்ப்பில்லை. மேலும், குழந்தைகளால் குடும்பத்துக்கு வருமான இழப்பு
ஏற்படாது. எனவே, பிள்ளைகள் பெயர்களில் பாலிசி எடுப்பதைத் தவிர்ப்பதே சரியான
அணுகுமுறையாக இருக்கும்.
இரண்டாவது காரணம், முந்தைய காலங்களில்
கடன் பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் அதிகமாக இருந்தது.
பணவீக்க விகிதம் குறைவாக இருந்தது. எனவே, எண்டோவ்மென்ட் போன்ற பாலிசிகள்
முதலீடாகப் பயன்படுத்தப் பட்டது, ஆனால், தற்போதைய நிலை வேறு, வட்டி விகிதம்
கணிசமாகக் (5%), குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் இது மேலும் குறைய
வாய்ப்புள்ளது. எனவே, இன்ஷூ ரன்ஸ் எடுப்பதை முதலீட்டுத் திட்ட மாகக் கருதவே
கூடாது.
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com |
ஆயுள் காப்பீடு எவ்வளவு எடுக்க வேண்டும்?
காப்பீடு
என்பது ரிஸ்க்கை டிரான்ஸ்பர் செய்யும் ஓர் ஒப்பந்தம் ஆகும். அதாவது, தன்
சுமையை இன்னொருவர் மீது மாற்றுவதாகும். ஒரு குடும்பத்தில் யார் வருமானம்
ஈட்டுகிறாரோ, அவர் பேரில்தான் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். அப்போதுதான்
அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், ஆயுள் காப்பீட்டின் மூலம் அவரது
குடும்பத்துக்கு நிதி ஆதாரம் கிடைக்கும்.
காப்பீடு எடுக்கும்போது
வருமானம் ஈட்டும் நபரின் வயது மற்றும் வருமானத்தைக் கணக்கில் கொண்டு,
ஹியூமன் லைஃப் வேல்யூ (ஹெச்.எல்.வி) அடிப்படையில் காப்பீடு கவரேஜ் தொகை
இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் இல்லை என்றாலும், அவரின்
குடும்பத்துக்கு எந்த நிதி நெருக்கடியும் ஏற்படாது.
மாதம் ரூ.1
லட்சம் வருமானம் ஈட்டும் நபர் ரூ.5 லட்சத்துக்கு விபத்துக் காப்பீடு
எடுத்து, அதன்மூலம் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், விபத்துக் காப்பீடாக
வெறும் ரூ.10 லட்சம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொகையை வைத்து
அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் வருமான இழப்பைச் சரிசெய்ய முடியாது.
எனவே, ஆண்டு வருமானத்தைப்போல் 12 முதல் 20 மடங்கு அளவுக்கு ஆயுள் காப்பீடு
எடுக்க வேண்டும்.
அதாவது, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம். இதை 15 ஆண்டுக்கு
எடுத்தால், ரூ1.8 கோடி அளவுக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். அப்படி
எடுத்து, கிடைக்கும் இழப்பீட்டு தொகைக்கு 7% (1,80,00,000 X 7%/12)
வருமானம் கிடைத்தால், மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கும்.
ரூ.1.8
கோடிக்கு எண்டோவ் மென்ட் பாலிசியை எடுக்க வேண்டுமெனில், அதிக பிரீமியம்
கட்ட வேண்டியிருக்கும். ரூ.1.8 கோடிக்கு 30 வயது நபருக்கு ஆண்டு பிரீமியம்
ரூ.35,000 ஆகும். ரூ.1.8 கோடிக்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுக்க ஆண்டு
பிரீமியம் சுமார் ரூ.9 லட்சம் கட்ட வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சம்
வருமானம் ஈட்டும் நபர் ரூ.9 லட்சம் பிரீமியம் கட்ட முடியுமா? எனவே, டேர்ம்
பிளான் சரியானதாக இருக்கும்.
No comments:
Post a Comment