Showing posts with label Mutual Fund. Show all posts
Showing posts with label Mutual Fund. Show all posts

ஓய்வுக்காலத் தேவைகளுக்காக மாதம் ரூ.1,000 முதலீடு

 

எனக்கு 24 வயதாகிறது. என் ஓய்வுக்காலத் தேவைகளுக்காக மாதம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். எனக்கேற்ற திட்டங்களைக் கூறவும்.

விவேக், கோவை.

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

இளம் வயதில் உங்கள் ஓய்வுக் காலத்துக்காக சேமிக்க ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான முடிவு.  டைவர்சிஃபைட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதன் மூலமாக உங்களின் இலக்கை எளிதாக அடைந்துவிட முடியும்.



பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், .சி..சி. புரூடென்ஷியல் ஃபோகஸ் புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

மேலும், 12% வருமானம் தர வாய்ப்புள்ள ஃபண்டில் மாதம் ரூ.1,000 என 34 வருடத்துக்கு முதலீடு செய்யும்போது உங்களின் 58-வது வயதில் 57 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

குறைந்தபட்ச  வருமானம் கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதன்மூலமாக மாதம் சுமார் ரூ.30 ஆயிரத்துக்குமேல் வருமானம் கிடைக்கும்.”

நன்றி விகடன்


S.Bharathidasan DECE, BA, FChFP.





Chartered Financial Practitioner

Chennai & Pondi 

MOB; 94441 94869, 

99528 74869

Share:

எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

வயது 45. கடந்த ஆறு மாத காலமாக வேலையில்லாமல் இருக்கிறேன். என் சேமிப்பு  மூலமாகக்  குறிப்பிட்ட அளவுக்கு வருமானம் கிடைக்கும்பட்சத்தில், வேலை கிடைக்கும் வரையிலான காலகட்டத்தை எளிதில் கடக்க இயலும். என் சேமிப்பில்  ரூ.20 லட்சம் இருக்கிறது. இதை முதலீடு செய்து மாதாந்தர வருமானம் பெற ஆலோசனை கூறுங்கள். எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டால் பயனுடையதாக இருக்கும்.


கிறிஸ்டோபர், முகநூல் வழியாக...

சி.பாரதிதாசன்,  


நிதி
ஆலோசகர், புதுச்சேரி / சென்னை   

நீங்களும் உங்கள் மனைவியும் தலா ரூ.4.5 லட்சத்தைஅஞ்சலக மாதாந்தர வருவாய்’ (MIS) திட்டத்தில் முதலீடு செய்தால், 7.6% வட்டி என்ற நிலையில் மாதந்தோறும் ரூ.5,700 கிடைக்கும். மீதமிருக்கும் தொகையில் ரூ.5 லட்சத்தை ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் டிவிடெண்ட் ஃபண்டில் முதலீடு செய்தால், தோராயமாக மாதம் ரூ.5,000 எதிர்பார்க்கலாம்.

மீதம் ரூ.6 லட்சம் உள்ளது. இதை .சி..சி. புரூடென்ஷியல் அஸெட் அலொகேஷன் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளவும். அதிலிருந்து எஸ்.டபுள்யூ.பி முறையில் மாதம் ரூ.5,000 வரை வருமானம் பெறலாம். மொத்தமாக, ரூ.15,700 மாத வருமானமாகப் பெற வாய்ப்பிருக்கிறது.”

Thanks Naanayam Vikatan 


S.Bharathidasan DECE, BA, FChFP.


Chartered Financial Practitioner

Chennai & Pondi 

MOB; 94441 94869, 

99528 74869

s_bharathidasan@yahoo.com

mailsbdpdy@gmail.com

 

Client login

 

WWW.MY-EOFFICE.COM 

 

Share:

மியூச்சுவல் ஃபண்ட்... ஒரு சூப்பர் மார்க்கெட்!

 மியூச்சுவல் ஃபண்ட்... ஒரு சூப்பர் மார்க்கெட்!


எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com


MF சூப்பர் மார்க்கெட்டில் மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே அது வெறும் ஷேர் மார்க்கெட்  மட்டுமே எனத் தவறாக நினைக் கின்றனர்

உண்மையில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி. சூப்பர் மார்க்கெட்டில் குண்டூசி முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத் துப் பொருட்களும் கிடைப்பது போல, மியூச்சுவல் ஃபண்டில் நம் எதிர்காலத் தேவைகள் அனைத்தை யும் நிறைவேற்றிக் கொள்கிற பற்பல திட்டங்கள்  உள்ளன.

 

மியூச்சுவல் ஃபண்டை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல ஈக்விட்டி சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள், கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.

 

பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டை அதன் தன்மைக்கேற்ப மூன்று வகைகளாகப் பிரிக்கலாம், அவை, செக்டார் ஃபண்ட், ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் ஆகும்.

 

எஸ்.பாரதிதாசன்
நிதி ஆலோசகர்


அதுபோல, கடன் சார்ந்த ஃபண்டை லாங் டேர்ம் ஃபண்ட் (10 ஆண்டுகளுக்கு மேல்), மீடியம் டேர்ம் ஃபண்ட் (3 முதல் 10 ஆண்டுகள்), சார்ட் டேர்ம் ஃபண்ட் என்று (3 ஆண்டுக்கும் குறைவான), அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்ட் (90 நாட்களுக்கு குறைவான)  கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஃபண்டுகளும் உள்ளன.

ஒரு முதலீட்டாளரின் வயது, அவரது இலக்கு, அவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ப மேற்கண்ட ஃபண்டுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக, குழந்தைகளின்  உயர்கல்வி மற்றும் ரிடையர்மென்ட் மற்றும் பிற நீண்ட கால (10 ஆண்டுகளுக்கு மேல்) தேவை களுக்கு ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்டைத் தேர்வு செய்யலாம்.  ஐந்து ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பணத் தேவைகளுக்கு பேலன்ஸ்ட் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான தேவைகளுக்கு கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

 லிக்விட் ஃபண்டு

வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்கைப் போல் எப்போது வேண்டுமானாலும் பணம் போடுவதற்கும் பணம் எடுப்பதற்கும் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதற்கு நுழைவுக் கட்டணம் மற்றும் வெளியேறும் கட்டணம் எதுவும் கிடையாது. இதில் 7 முதல் 9% வரை வருமானம்  கிடைக்கக்கூடும்.

  இலவச ஆப்கள்

இந்த ஃபண்ட்களில் செல்போன் மூலம் முதலீடு செய்யும்விதமாக ஐசிஐசிஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் (ICICI - IPRU TOUCH), ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Reliance - Simply Save) போன்றவை இலவச ஆப்களை   வெளியிட்டுள்ளன.  இது முதலீட்டாளா்்களுக்கு மிகப் பெரிய வரப் பிரசாதம் ஆகும்.

 

அதுபோல ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பணம் தேவை இல்லை என்பவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு பதிலாக கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். எஃப்.டி-யை விட இதில் கூடுதல் வட்டி கிடைக்க வாய்ப்புண்டு.  மியூச்சுவல் ஃபண்டில் பணவீக்க விகிதச் சரிக் கட்டல் சலுகை இருப்பதால் லாபத்துக்கு கட்டும் வரியிலும் சலுகை கிடைக்கும்.

 

இந்தியர்கள்ஒட்டுமொத்த சேமிப்பையும் வங்கி மற்றும் அஞ்சலக வங்கிகளில் முடக்கி விடுகின்றனர். தங்களின் சேமிப்பு, விலைவாசியைத் தாண்டி வளர்கிறதா என்பதைக் கவனிக்க தவறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், முதலீடு பற்றிய அறியாமை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் அச்சமே.

ஈக்விட்டி ஃபண்ட் சராசரியாக 20 சதவிகிதத்துக்கு மேல் வருமானம்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது மலையில் பயணிப்பது போல. ஏற்றங்களும் இறக்கங்களும் மாறி மாறி வரும். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் மலையின் உச்சியை அடைந்துவிடுவோம். கடந்த 20 வருடங்களில் மியூச்சுவல் ஃபண்ட் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. ஆனாலும், ஈக்விட்டி ஃபண்ட் சராசரியாக 20 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தந்துள்ளது. இனியாவது சேமிப்பின் ஒரு பகுதியை எஸ்..பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து லாபம் பெறுவோம்!

S.Bharathidasan DECE, BA, FChFP.

Chartered Financial Practitioner

Chennai & Pondi 

MOB; 94441 94869, 

99528 74869

s_bharathidasan@yahoo.com

mailsbdpdy@gmail.com

Share:

சி.பாரதி தாசன், சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர், வெல்த் மேனேஜ்மென்ட் சொலுசன்ஸ் புதுச்சேரி, சென்னை



S.Bharathidasan DECE, BA, FChFP.

Chartered Financial Practitioner

Chennai & Pudhucherry

MOB; 94441 94869, 

99528 74869

s_bharathidasan@yahoo.com

mailsbdpdy@gmail.com




 





Share:

மியூச்சுவல் ஃபண்ட், தேசிய ஓய்வூதியத் திட்டம், எது சிறந்தது?

 

மியூச்சுவல் ஃபண்ட், தேசிய ஓய்வூதியத் திட்டம், எது சிறந்தது?

 தங்கத்தம்பி, எடப்பாடி

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், சென்னை /  புதுச்சேரி

``
இந்த வித்தியாசத்தை விளக்க நான் எளிய உதாரணம் தருகிறேன். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதாமாதம் 15,000 ரூபாயை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்த முதலீடு 15,000*12*15 ஆண்டுகள் = ரூ.27 லட்சம் ஆகும். இந்தத் தொகைக்கு 15% வருமானம் கிடைக்கும் எனக்கொண்டால் ரூ.1 கோடி  கிடைக்கும்.




முதலீட்டுத்தொகை ரூ.27 லட்சம், வரிக் கழிவுத் தொகை 1 லட்சம் போக ரூ.72 லட்சத்துக்கு தற்போதைய வரிமுறைப்படி 10% எனக் கணக்கிட்டால், ரூ.7.2 லட்சம் வருகிறது. இதைக் கழித்ததுபோக நமக்கு ரூ.92.8 லட்சம் கிடைக்கும். தொடர்ச்சியாக வருமானத்தை வேறு ஃபண்டுகளுக்கு மாற்றம் செய்வதன்மூலம் நீண்டகால ஆதாய வரியைக் குறைக்கலாம்.

ஆனால், ரூ.27 லட்சத்தை என்.பி.எஸ் என அழைக்கப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்து, அதற்கு வருமானம் 10% எனக் கணக்கிட்டால், ரூ.62 லட்சம் கிடைக்கும். இந்த ரூ.62 லட்சத்தில் 60% தொகையானது வரி இல்லாமல் பணி ஓய்வின் போது திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகை பென்ஷன் திட்டத்துக்குப் போகும்.

தற்போதைய நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் குறைந்தபட்சம் 12% வருமானம் கிடைத்தால்கூட, என்.பி.எஸ் முதலீட்டின்மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட சற்றுக் கூடுதலாகவே இருக்கும். என்றாலும், பென்ஷன் வருமானத்தைப் பெற விரும்புபவர்கள் என்.பி.எஸ் முதலீட்டைப் பரிசீலிக்கலாம்.’’  


S.Bharathidasan DECE, BA, FChFP.

Chartered Financial Practitioner

Chennai & Pondi 

MOB; 94441 94869, 

99528 74869

s_bharathidasan@yahoo.com

mailsbdpdy@gmail.com

Share:

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Recent Posts